ஜேர்மனி தமிழ்எ ழுத்தாளர் சங்கத்தினரின் பாராட்டு
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருக்கு நினைவுச் சின்னம் வழங்கியமை
நான் ஏற்புரை வழங்கியமை
பிறப்பின் புனிதம் உணர்த்திய வேளை 11.06.2016 அன்று, என் துடிப்பின் பேனா வடித்த சிற்பம், என் எண்ணங்களின் முத்துக்கள் கோர்த்தெடுத்த அறிவு நூல் ஆரமாய் வடிவெடுத்து ஜேர்மனி மண்ணில் டோட்முண்ட் நகரில் வெளியீட்டுவிழாவாய் அழகுபெற்றது. தேடிப்பெற்ற சொத்துக்களாகிய அன்பு உறவுகளை முக்கோண முக்குளிப்பு என்னும் நூலால் பாலம் போட்டு, அவர்கள் நெஞ்சங்களில் வந்தமர்ந்த அற்புதமான பொழுது.
நிஜங்களை வெளிக்காட்டி, எழுதும் கரங்களுக்கு வலுவூட்டும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரின் மற்றுமொரு முனைப்பு முக்கோணமுக்குளிப்பின் வெளியீடு. ஓடிக்கொண்டே இருக்கும் உலகவாழ்க்கையில் ஓர்நாள் வாசிப்பை நேசித்து, தமிழுக்குத் தலைவணங்கி Dietrich - Keuning – Haus, Leopoldstraße 50-58, 44137 Dortmund
என்னும் இடத்தில் அனைவரும் இணைந்தனர். நடனமும் கர்நாடக இசையும் நிகழ்வின் கலைநிகழ்வுகளாகின. நூலின் அறிமுகமும், விமர்சனமும் கட்டுரை வரிகளின் சுவைக்கு வாசகத் தேனீக்களை மொய்க்கச் செய்தன. வயதிலும் கல்வியிலும் உயர்ந்த பிரதமவிருந்தினரின் வாழ்த்தும், நூல் வெளியீடும் என் ஆசிக்கு சாட்சிகளாயின. சிற்றூண்டியும், பானங்களும் செவித்தீனியின் களைப்பகற்றச் சேவையில் இணைந்தன.
வாழ்த்துரைகள் எழுதும் பசியைத் தூண்டின. எழுத்தின் மேன்மையை உணர்த்தின. அனைத்துக்குமான நன்றியை என் மகளின் வரிகள் காணிக்கையாக்கின.
கவிதாயினி வேதா இலங்காதிலகம்
திருமதி. கீதா பரமானந்தம்
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர்
திரு. திருமதி. பவானந்தராஜா
முக்குளித்து இலக்கிய முத்தெடுத்து முக்கோண முக்குளிப்பெனும் பெயரில் அதைத்தொடுத்து இக்கணமே அதை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கும் பாவை இவள் கௌசி சிவபாலன் இளமைப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டவர் இலக்கணமாய் வாழ பெற்றோரும் அமைந்திடவே இலக்கியமும் இலக்கணமும் அவரிடம் கைகோர்த்துக்கொண்டது. முத்தமிழும் விளையாடும் மட்டுமாநகரினிலே ஆரம்ப அறிவினை ஆழமாய் விதைத்து பல்கலைக்கழகம்வரை சென்று விருட்சமாய்த்தனை வளர்த்து கவிதை கட்டுரை சிறுகதையென பல்வேறு இலக்கிய வடிவங்களில் தன் ஆளுமையைப் பதித்த இவர்ஆற்றலுள்ள ஆசிரியையும் கூட இவர் எழுதும் எழுத்தெல்லாம் தலை நிமிர்ந்து தடையுடைக்கக் கவிபாடும் வடம்பிடித்து இணையத்தளத்தினூடும் இலக்கியம் பேசும் இலக்கியவடிவமாய் வலைப்பின்னலை அமைத்து தன் எழுத்தால் இலக்கிய ஆர்வலரை இணையமூலம் இணைத்தவர். இலக்கியதாபம் இயல்பாக இவர்மனத்தில் ஊற்றெடுக்க இணைந்த வாழ்கைத்துணையும் இவரோடு இசைந்து கைகொடுக்க இவர் பல படைப்பைப் படைப்பதற்கும் இவர் இத்தளத்தில் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்பும் வசமாகிக் கொண்டது. மனம் கனக்கும் போதெல்லாம் எழுத்தாலே அதை வடித்து தன் உணர்விற்கு உரமூட்டி கவிதையாய் வடித்தவர் கண்டதை கேட்டதை அறிந்ததை கட்டுரையாய் கட்டியம் கூறியவர். வாழ்வின் அனுபவங்களை. துயரங்களைஇ சிறுகதையாய் செதுக்கியவர் .பல இலக்கிய நூல்களில் தன் படைப்புக்களைப் பதியம் செய்தவர் வானலையூடாக தன்குரலில் கவிபாடி தன் திறமையைப் பறைசாற்றியவர் ஆசிரியையாகவும் அமர்ந்து வழிகாட்டிய ஆசானுமாவார். அவரின் இலக்கியப் பணி மென்மேலும் தொடரவேண்டும் இன்னும் பலபடைப்புக்கள் பவித்திரமாய் வெளிவர வேண்டும். இனிவரும் படைப்பெல்லாம் உலகத்தரத்திற்கு உயர்ந்திடவேண்டும் இவர் கையில் தவழும் எழுதுகோல் வளைந்து கொடுத்துச் சேவகம் செய்யாமல் நிமிர்ந்துநி ன்று பேசவேண்டும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெஞ்சுடன் பாரதி கண்ட புதுமைப்பெண் போல் அவரின் எழுத்துக்களும் புரட்சி கரமாய் அமைந்திட வேண்டும் மென்மேலும் இவரின் படைப்பெல்லாம் பாரெல்லாம் பவனிவர பார்போற்ற வாழ்ந்திடவே நாமும் மனதாரவாழ்த்துகின்றோம்.
பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி
இலங்கை தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பும் அமைப்பாளர்
கலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...!
ஈழத்து மண் பெற்றெடுத்து பெருமை கூறும் தவப் புதல்வி
கௌரி சிவபாலன் என்னும் புகழ் பரப்பும் இவள்
புதுமைகளால் பூத்து மணக்குமாம் புவி ..!
இலக்கியப் படைப்புக்களை வாயிலேந்தி
வாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்
துலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து
தூது விடும் கலையாம் கண்கள் ...!
கட்டுரைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்
கலையழகு கலைமகளின் மடியில் வாழும்
புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
புதுயாம் இவள் திறப்பு ..!
ஆயகலை பலதும் இவள் கைகளால்
ஆடி மகிழுமாம் தமிழை வணங்கி
தூயவை தொட்டு கட்டிடும்
தாலி தொடரும் பணியாம் வேலி!
கவிதை நாவிலேந்தி வாசிக்கின்ற முத்துக்கள்
எழுந்து நடக்கணும் மனித மனதிலும் மண்ணிலும்
மாளாது வாழும் மாபணி உச்சம்
மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...!
கலைமகள் காணுகின்ற தோழி முகம் நீ
பக்கத்து துணையானாய் கலைக்குள்ளே
நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து
நலம் பெறுமாம் நயந்து
வாழ்த்துகின்றேன்........
அமுதம் ஊறும் அழகு தமிழில்
அள்ளி எடுத்த சொல்லாலே
ஆரம் சூட்டி அழகு பார்த்தேன்
ஆயிரம் வரிகளாலே
இளமை என்றும் நமது கூடே
இருந்து பணிகள் செய்யாதென்று
ஈரம் நெஞ்சில் காயும்முன்னே
ஈராயிரம் பணிகள் செய்தாய்
உழைக்கும் கரங்கள் உம்மைப்போல்
உயர்வைக் காணும் உலகினிலே
ஊட்டி வளர்த்த உன் அன்னைமொழியை
ஊனமாகாக் காத்து நின்றாய்
எழிலான தமிழோடு இணைந்து வாழ்ந்து
எந்நாளும் இன்பங் கண்டாய்
ஏற்றம் உண்டு எதிலும் என்று
ஏறுவோர்க்கு ஏணியானாய்
ஐயமுற்ற வேளையிலும் அடியேனே
ஐயனென்றாய்
ஒல்காப் புகழிலும்
ஒற்றுமையே உயர்வென்று
ஓங்கியே குரல் கொடுத்து
ஒளவையின் நல்வழியில்
அவனியில் வாழ்ந்திட உயிரெழுத்துக் கொண்டு
உளமார வாழ்த்துகின்றேன்.
உவமையின் வெற்றசைக்கு
ஊர்க்கோலம் போட்டு புரியாத உவமை போல் வாழாது
நெடிலிழந்த உயிர் மெய்யாய் நிலைத்து
நின்று
உயர் தமிழால் ஒளிபெற்று உயர்ந்து வாழ வாழ்த்துகின்றேன்.
எண்ணச் சிதறல்களின் வண்ணக் கலையழகாம்
முக்கோண முக்குளிப்பை முழுமனதாய் வாழ்த்துகின்றேன்.
திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன். B.A
(ஆசிரியை தமிழர்
கலையகம் டோட்முண்ட்)
வாழ்த்துப்பா
கெங்கா ஸ்ரான்லி
மீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி
தேன் தமிழாம் பைந்தமிழை நேர் கொண்டு,
ஆற்றல் மிகு அறிவில்
முக்கோண முக்குளிப்பாய்
சாற்றிய ஆய்வுரை சாலவே ஏற்றமுடை
நூல் வெளியீட்டு
விழாவாய்
இஞ்ஞாலமதில் இவரது கட்டுரைதொகுப்பு
எஞ்ஞானம் உள்ள எவர்க்கும் பயக்கும்
கலைமகள் தந்த அறிவுடைமை
நிலையாய் நின்று நின் புகழ் விளங்கிட
ஆழ்ந்த தமிழறிவு ஆய்ந்துணர் பேராற்றல்
வாழ்த்தி பலர் போற்றிடவே
வாழ்க நீரும் வையகத்தே!
தமிழரது பண்பாடு
அமிழ்தினிய மொழி
அன்புடைமை
அறிவுடைமை
செய்யுடைமை
திண்மையது
வலுவுடைமையாக்கியதை
குழுமமது கூடலிலே
கோன் வளர்த்த சங்கத்தமிழ்
தான் மதிக்கும்
ஆவலுடன்
முழுமுடைமை செய்து தந்தாள்.
மீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி
லண்டன் மலேசியாவிலும்
கட்டுரைத்
தொகுப்பாய் உன் படைப்பு
மக்கள் கையில் தவழ்ந்திட
கலசம் ஒன்று தந்தங்கே
மகுடமாய் ஏற்றிடவே
மக்களுக்கு விளக்குரையாய்
வடித்தெடுத்து விளம்பினையே!
அருந்தமிழால் அடியெடுத்து
பைந்தமிழை விரித்து
புதுபுது அர்த்தங்கள் புனைந்து
ஒ.வி.பி யின் திறன் வளர்ப்பு
இலண்டன் தமிழ் வானொலியில்
இலக்கியத்தின் இன்றைய நிலை
இலக்கிய எழில் நடை
இனிய தமிழின் சொற்சுவை
எந்தனையும் நனைய வைத்ததே
உன் இலக்கிய நயம்.
இவரது எழுத்திலே
சிலருக்கு இசைவாக்கம்
இதனாலே விரிந்தது
இவரது தேடல் ஊக்கம்.
கண்டதே முடிவில்
ஒரு மாற்றம்
அதுவே முக்கோண முக்குளிப்பு
நூல் வடிவத்தோற்றம்.
குவலயத்தில் சிறந்து
குமுகத்தில் இனியவளாய்
குங்குமம் தந்தவன் பால்
தங்கம் பொல வரும் அன்புடையாள்
பல்கலை படிப்பென்றாலும்
தாய் என்று வந்தவுடன்
சேய்க்கு அன்னை இவள்.
கணவனுக்கு சினேகிதி அவள்
இன்னிசையோடு இல்லறம்
காக்கும் இனியவளே கெளசி
சொல்லறம் கண்டு பொருள் நயம் வகுத்து
இருள் விலக்கிய ஒளியாக,
ஒளிமயமான எதிர்காலம்
உண்டே உமக்கு
வாழ்க! வளமுடன்!
வளர்க உம் எழுத்தாற்றல்!!.
-
எனைத் தட்டித் தரும் வார்த்தைகள் என் பேனா என்றும் தலைகுனிய வழி வகுக்கும் . மிக்க நன்றிகள்
நாள் : 11.06.2016 சனிக்கிழமை
நேரம் : 14.30
இடம் : : Dietrich - Keuning - Haus
Leopoldstraße 50 – 58
44137
Dortmund
மங்கள விளக்கேற்றல்
மௌன அஞ்சலி
தமிழ்த்தாய் வாழ்த்து
சங்கீத ஆசிரியை ஞானாம்பாள் விஜயகுமாரின் மாணவிகள்
வரவேற்புரை
திருமதி. கலா மகேந்திரன்
(உபதலைவர். யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)
வரவேற்பு நடனம்
செல்வி. சகானா திருச்செல்வம்
தலைமையுரை
திரு. வைரமுத்து சிவராஜா
(தலைவர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)
கர்நாடக இசை
செல்வி. சந்தியா ரவீந்திரன்
நூல் அறிமுகம்
திரு. பொன். புத்திசிகாமணி
(செயலாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)
நூல் வெளியீடு
நூல் விமர்சனம்
சின்னத்துரை ரவீந்திரன்
(ஆசிரியர் )
நடனம்
செல்வி கௌசிகா மணிவேந்தன்
பிரதமவிருந்தினர் உரை
நூல் வெளியீடு
பிரதமவிருந்தினர் உரை
திருமதி. ரஞ்சிதம் கந்தையா
(முன்னாள் ஆசிரியை இலங்கை)
வாழ்த்துரைகள்
பவானந்தராஜா
கலைமகள் ஹிதாயா ரிஷ்வி
வசந்தா ஜெகதீசன்
நயினைவிஜயன்
ஏலையா முருகதாஸ்
பசுபதிராஜா
சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்)
கீதா பரமானந்தன்
கெங்கா ஸ்ரேன்லி
ஜெகதீஸ்வரி மகேந்திரன்
ஏற்புரை
நன்றியுரை
மெனூஷா சிவபாலன்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குஎமது மனமார்ந்த வாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் என்றென்றும்.
பதிலளிநீக்குhttps://kovaikkavi.wordpress.com/