வானத்து விளக்கு
வாழ்வின் ஒளி
மேதினியில் உதயம் அன்பு
மேலவரின் உலகம்
மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க
மண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்
மனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்
காலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.
பாலகன் ஜேசு
பாரினில் உதித்த
பக்குவம் புரியும்
மனங்கள் பண்பினில் உயரும். - அவர்
பாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால்
பாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்
பிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை
ஏழ்மையும் ஓர்நாள்
பாரினில் சிறக்கும் – உலகம்
ஏந்தியே மகிழும்
இன்னல்கள் தீர்க்கும்
பிறர்க்காய்
வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை
தனக்காய் வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை
உடல் பொருள் ஆவி
உலகுக்காய் தந்தால்
இறை தூதரென
உள்ளங்கள் ஏந்தும்
அனைத்து
உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்
நன்றியுடன் இனிய கிறிஸ்துமஸ்
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்.
Vetha.Langathilakam.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎனது புதிய பதிவு (என் நூல் அகம் 2) காண்க.....
பொங்குகின்ற புத்தாண்டில் புலரும் ஆண்டில்
பதிலளிநீக்குபொங்கட்டும் இன்பங்கள்! புதுமை சிந்தி
எங்கெங்கும் சிறகடித்தே உங்கள் நோக்கம்
எல்லாரும் அறியட்டும்! எழுத்தில் எண்ணம்
தங்கட்டும்! படிப்போரின் தூய நெஞ்சில்
தகரட்டும் அவலங்கள் துன்ப மெல்லாம்!
எங்கிருந்து பார்ப்போரும் நீர்யார் என்று
எழுத்தாலே அறியட்டும் தமிழாய் வாழ்க!
புத்தாண்டு வாழ்த்துகள் சகோ!
நன்றி