நன்றாய்த்
தானே வளர்த்தேன். நலமோடு நல்லுரைகள் உவந்தளித்தேன். அளவுக்கதிகமாய் பாசத்தை அள்ளி
வழங்கினேன். இரவு பகலாய் இன்பமன்றி துன்பத்தை அறியாது வளர்த்தேன். அளித்த
அறிவுரைகள் அனைத்துமே விழலுக்கிறைத்த நீராகிப் போனதுவோ.
சிந்தனையனைத்தும் ஒருமித்து
மகனைச் சுற்றிச் சுற்றி வந்தன. நான் செய்த குற்றம் என்ன? மீண்டும் நினைத்துப்
பார்த்தேன். என் எண்ண அலைகளில் என் குற்றம் எங்காவது மிதந்து வருகின்றதா என்று. பாடசாலை
செல்வதற்காய் ஆடை மாற்றச் சென்ற மகன், உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டு நிற்கின்றான்.
என்ன இது பண ஆராய்ச்சி? என்னும் என் வினாவிற்கு கணக்குப் பார்த்து திரும்ப வைக்கப்
போகின்றேன் என்னும் ஒரு பதிலை இறுத்தான். பதிலினுள் பதிந்திருந்த ஒரு மறைவு என்
ஆராய்வுக் கண்ணைத் திறந்து விட்டது. எவ்வித சலனமுமின்றி வேறு கடமை முடித்து வந்து
பாடசாலைக்கு ஏதோ பணம் கொடுக்க வேண்டும் என்றாயே இதோ உன் பாடசாலைப் பையினுள் வைக்கின்றேன்.
என்று பணம் வைக்கும் பாங்கில் கைவிரல்களை பாடசாலைப் பையினுள் பரவவிடுகின்றேன்.
உள்ளே ஒரு ஒயிரோ ஒழிந்திருந்தது.
"எப்படி
இவ் ஒயிரோ இதற்குள் வந்தது. ஏற்கனவே உன்னிடம் இப்பணம் இருந்ததில்லையே? உண்டியலினுள்
இருந்து எடுத்தாயா?
"ஆம்.....''
என்னும் உண்மை ஆறுதலாய் வந்தது .
"நீ
இப்படிச் செய்வது சரியா? பொய் சொல்வது முறையா? நீ செய்கின்ற தப்பான காரியங்களால்
பெற்றோரை விட்டுநீ சிறுது சிறிதாய் தூர விலகிப் போவாய். பணம் கொண்டு செல்வது பிழை
இல்லை.அதை மறைத்துப் பொய் சொல்வதே பெரும் குற்றம். இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஓர்
ஒயிரோ உனக்காக வழங்குகின்றேன். அதை உன் சரியான தேவைக்குப் பயன்படுத்திக் கொள்.
பண்பாக நான் தரும் இச் சலுகை உன் பண்பற்ற செயலைச் சிந்திக்க வைக்கும் என்று
நம்புகின்றேன். பெற்றோரிடம் எதையும்
மறைக்கும் இக்குற்றத்தை இன்றுடன் தூர எறிந்துவிடு. மன்னிக்க முடியாக் குற்றம்
என்று உன்னை அடித்துத் திருத்த விரும்பவில்லை. என் மகன் பற்றி நான் கொண்ட
கருத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்துவிட்டது''
கட்டளையை கருத்திட்டு பாடசாலை
அனுப்பி விட்டாள்.
இங்கு ஒரு
தாய் மனம் தவிக்குது. இது என் குற்றமா? அவன்
குற்றமா? யாரைக் குற்றம் நான் சொல்வேன்?
//என் மகன் பற்றி நான் கொண்ட கருத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்துவிட்டது''//
பதிலளிநீக்குதங்களின் தவிப்பினை நன்கு உணரமுடிகிறது..
//இங்கு ஒரு தாய் மனம் தவிக்குது. இது என் குற்றமா? அவன் குற்றமா? யாரைக் குற்றம் நான் சொல்வேன்?//
சமயத்தில் இதுபோல விதி நம்மிடம் விளையாடி விடுகிறது.
இனி இதுபோன்ற குற்றம் ஏதும் நடக்காத வகையில் தாங்கள் மிக மென்மையாக அவனிடம் நடந்துகொண்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்துள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
இது என் கதை இல்லை சார். நானாகப் பாவித்து இக்கதை தந்தேன். எனக்கு ஒரு மகள் மாத்திரமே. அவருக்கு பதினெட்டு வயதாகி விட்டது. ஆனாலும் உங்கள் உடன் பின்னூட்டத்திற்கு மிக மகிழ்ச்சி
நீக்குபுரிந்து கொண்டு அந்த மகன் மாறினால் மிக்க சந்தோசம் தான்...
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஒரு ஆயின் பதைபதைப்பு வரிகளில் தெரிகிறது. இது மிகப் பெரிய குற்றமில்லை என்று தான் நான் சொல்வேன். அவனுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தாலே அவன் கண்டிப்பாக திருட மாட்டான். இதில் யாருமே குற்றவாளியே இல்லை. திருட்டு என்று தெரியாமல் செய்வது தான் இது. நம்மால் மிக எளிதாக திருத்த முடியும்.
பதிலளிநீக்குநிச்சயமாக சந்தர்ப்பம் சூழ்நிலை தான் ஒரு மனிதனை மாற்றுகின்றது . சரியாக புரிந்து கொண்டு நடக்கும் பட்சத்தில் வாழ்க்கை இனிக்கும் .நன்றி
நீக்குபுரிந்து கொள்வான்
பதிலளிநீக்குமனம் மாறுவாம்
நல் மனிதனாய் வாழ்வான்
ஒரு தாயின் பரிதவிப்பினை
பதிலளிநீக்குசுருக்கமாகவெனினும் மிகச்சுறுக்கென
படிப்பவரையும் பாதிக்கும் வண்ணம்
சொல்லிச் சென்ற பதிவு மிக மிக அருமை
அன்பால் மிக ஆதரவாக அவனுக்குப் புரியும் வண்ணம்
இதுபோல் சொல்லிச் செல்லும் பக்குவம் பெரும்பாலான
பெற்றோருக்கு இல்லாமல் போவதே
குழந்தைகள் திசை மாறக் காரணம்
என்பதைக் குறிப்பாக உணர்த்திப் போகும் பதிவு
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்