• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 18 ஜனவரி, 2014

    முடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)

                           

          
    பிறப்பின் பெருமை சந்ததி வளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. என்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கையின் தடயம் மறைந்து போகின்றது. தம்பதிகளாய் வாழ்ந்த தொடர்பு அறுந்து போகின்றது.  மனையின் மகிழ்ச்சி மழலையில்தான் மண்டிக்கிடக்கின்றது. அம்மா என்ற வார்த்தையே ஒரு பெண்ணின் காதுகளுக்குத் இன்னிசைப்பாட்டை இசைக்கமுடியும்.
         
    புழுவாய் நெழிந்தாள். முழங்காலை முகம்வரை இழுத்து பின் நீட்டி புரண்டு புரண்டு படுக்கையைக் கரடுமுரடாய் கண்டாள். அருகே படுத்திருந்த கணவனை ஒருமுறை பார்த்தாள். சலனமின்றி நித்திரையில் நிம்மதிதந்த மூளையின் தயவில் கட்டிலில் கிடந்த கணவனின் மார்புக்குள் நுழைந்தாள் சிந்து. அவள் நெருக்கத்தில் உறக்கம்  துலைந்த மதனும்

    "என்னம்மா....... நித்திரை வரல்லையா? அன்பொழுகக் கேட்டான்.

    "ம்....''

    "காலையில் வேலைக்குப் போகவேணுமல்லவா.....''

    "உழைச்சு உழைச்சுத்தான் என்னத்தக் கண்டோம்''

    "இதென்ன இந்த நேரத்தில் பேசும் பேச்சா. பேசாமப்படு நாளைக்குக் கதைப்பம். கண்டதையும் நித்திரையில் போட்டுக் குழப்பாதையும். இப்படித்தான் என்றால், இப்படித்தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணும்....``

    இவருக்கெங்கே புரியப்போகிறது. என் மனம் படும்பாடு. சிந்தனை மனதுக்குள் புகுந்துவிட்டால். மூளை அதுபற்றித்தானே வேலை செய்யும். நித்திரை கொள்ள சம்மதிக்குமா. என்னை நான் மறந்தாலேயே என் மூளை களைத்துக் கண்ணை மூடச்செய்யும். அதுதான் முடியாது முனகுகின்றேனே. நேரத்தைப் பார்த்தாள் சிந்து அதுவோ ஓடுவதாக இல்லை. ஒரு செக்கனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்போல் இருந்தது. ``சீ......´´என்றபடி எழுந்தமர்ந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு சமையலறையினுள் எதிர் கொள்ளும்; நாளுக்கு எந்திரமானாள்.
             
            உடலுக்கு உரமேற்றும் உணவுகள் உதவிட உத்தரவுகேட்டு சமையலறை மேசையில் தயாராக இருந்தன. விடிகாலைப்பொழுது தன் கடமைக்காய்த் தயாரானது. அலாரச்சத்தத்துடன் இணைந்தே மதனின் குரலும் ஓங்கி ஒலித்தது.

    ``சிந்து..... சிந்து.....´´

    ``என்னப்பா.... ´´

    ``இந்த அலாரத்தை நீ மாற்றல்லையா? அதனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல. சொல்லிட்டம் என்ரதுக்காக விடாது அடித்துக்கொண்டே இருக்குது. நாங்க இன்றைக்கு வேலைக்கு லீவெல்லோ எடுத்தோம். டொக்டர்ட்ட Termin  இருக்கல்லவா...´´

    ``சரிசரி எழும்புங்க. நான் மறந்திட்டன். டொக்டரிட்டப் போகமுன் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு´´

    நீண்ட பெருமூச்சுடன் சூடு பறக்கும் தேநீர் மெல்லமெல்ல உற்சாகம் ஏற்ற சிந்து வார்த்தைகளை மதன் மனம் மென்று கொண்டிருந்தது.

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...