துப்பாக்கியும் இரவையும் குறிபார்ப்பதால்
சமுதாயக் கவிஞன் கைமுனைப் பேனா
கறுப்பு மை துப்புகிறது.
காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் – அங்கு
அங்கீகரிக்கப்படாத தலைவர்களும்
தெய்வங்களாக்கப்பட்ட போலி மனிதர்களும்
கோடீஸ்வரர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோயில்களும்
காலத்தை அலங்கோலமாய்க் காட்டிக் கொண்டிருக்கும்.
இலக்கியங்களெல்லாம் கேள்விக்குறியாகின்றன
பொய்மைகளுக்குப் புகலிடம் கொடுத்த காரணத்தினால்.
புகழும் பயமும் கூடுகட்டியதனால்
இலக்கியப் பறவை கூட்டுக்குள் குளிர் காய்கிறது.
.....
வறுமை
பஞ்சம் பட்டினி
விளைநிலங்கள்
புதைகுழிகள்
ஓசோன் படை
பாதுகாவலர்கள்
பலமிழந்து போனார்கள்.
பூமித்தாய்
பழைமை
மரங்களே ஆண்டுக்கொருமுறை ஆடைமாற்றுகின்றன
மனிதன் மனஏட்டில் என்றோ கிறுக்கப்பட்ட வாசகங்கள்
இன்றும் அழிக்கப்படாமல் இருக்கின்றன.
அருமை.
பதிலளிநீக்குஒவ்வொரு குறுங்கவிதையும்
பதிலளிநீக்குமலர்ந்து மணம் வீசும் அழகிய மலர்களாக
ஜொலிக்கிறது
ஒவ்வொரு கவிதைக்கு இடையிலும்
வண்ண மலர்களை இணைத்ததுதான்
எத்தனைப் பொருத்தம்!
மனம் கவர்ந்த அழகிய தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிந்தனையைத் தூண்டும்
பதிலளிநீக்குசெவ்வரிக் கவிதைகள்
நன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அழகு கவிதைகள்
பதிலளிநீக்கு///பஞ்சமும் பட்டினியும் விஞ்சி விட்டன.
பதிலளிநீக்குவிளைநிலங்கள் புதைகுழிகளாக்கப்பட்டதனால்///
எனக்குப் பிடித்த குறுங்கவிதை
எல்லாக் குறுங்கவிதைகளும் சூப்பர்.
பதிலளிநீக்கு//புகழும் பயமும் கூடுகட்டியதனால்
இலக்கியப் பறவை கூட்டுக்குள் குளிர் காய்கிறது.//
என்னை மிகவும் கவர்ந்தது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk
// இலக்கியங்களெல்லாம் கேள்விக்குறியாகின்றன
பதிலளிநீக்குபொய்மைகளுக்குப் புகலிடம் கொடுத்த காரணத்தினால்.//
உண்மை தான் சகோதரி...மலிவு விலைக்கு மட்ட ரகங்கள் வரும்பொழுது தரங்கள் கவனிக்கப்படுவதில்லை.. குறுங்கவிதைகள் அருமை
உங்களின் அனைத்து குருங்கவிதை களும் சிறப்பானவைகள் ஒன்று மட்டும் முரண்பாடு கொண்டு உள்ளது அதாவது ஓசோன் படலம்கிழிவதற்கு அதன் அகவை காரணமல்ல இங்கு நிலம் வெப்பம் அடைவதால் படலம் கிழிகிறது இத்தனால் துருவ பிரதேசங்கள் உருகி நீர் நிறைய வய்ய்ப்பு உண்டாகும் என அஞ்ச படுகிறது சிறப்பான ஆக்கம் பாராட்டுகள் தொடர்க.
பதிலளிநீக்குஅழகான கவிதைகள்..ரசித்தேன்...நன்றி சகோதரி....
பதிலளிநீக்குஉண்மைதான் தயாநிதி அவர்களே! வயதாகிவிட்டதும் உண்மைதானே? பாதுகாவலர்கள் பலமிழந்ததும் உண்மைதானே. பலமிழக்கக் காரணம் பூமியிலிருப்போரானாலும் பாதுகாக்க முடியாமல் போகின்றபோது பூமி பலமிழக்கின்றதுதானே. உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குகுறுமணலாய்ப் பரவி
பதிலளிநீக்குகுறும் தளிராக
சீறடி வைத்த
குறுங்கவிதை
மறுபடியும் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
முத்துக்களாய் பிரகாசிக்கிறது குட்டி குட்டி கவிதைகள்....
பதிலளிநீக்குமலரும் அழகிய பூக்கள் சொல்லிச்செல்கிறது அழகை....
துக்கம் என்பதால் தான் கறுப்பு மையாக இருக்குமோ?
இரண்டாவது கவிதை செம்ம நச்....
மரத்தை மனிதனுக்கு பொருத்தமாய் சொன்னது அழகு பழைமை கவிதைவரி அருமைப்பா...
முத்தாய் கோர்த்த குட்டி கவிதைகளில் இருக்கும் மெசேஜ் அருமை....
அன்பு வாழ்த்துகள் சந்திரகௌரி....
இலக்கிய பறவை... ரசித்தேன்.
பதிலளிநீக்கு