• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 11 செப்டம்பர், 2021

    மகாகவி பாரதி 100 ஆவது நினைவு நாள் 2021

                                                



    கவி என்னும் வித்துக்குள் 
    உலகை கட்டிப் போட்ட கவிஞனே 💪

    காற்றும் கூடப் பேசும் உன்  மொழியைக் 
    காலம் கூட அழிக்க மாட்டா 😝 

    நீ போட்ட பாதைக்குள் நீள்கிறது 
    கவிஞர் குழாம் 

    பாதை எங்கும் தடயங்கள் 
    பூங்காக்களைப்  பொழிகின்றன 💝💝

    வாசம் நுகருக்கிறேன் 
    எனக்குள்  கரைந்து போகிறேன் 😀😀

    தேர் பிடித்து யாரும் இழுக்கவில்லை 
    மேடையிட்டு யாரும் போற்றவில்லை 
    மலர் எடுத்து யாரும் சூட்டவில்லை 
    பொன்னாடை யாரும் போர்த்தவில்லை 😮😮😮

    புகழோடு இன்றும் வாழ்கிறாயே 
    கவிஞனா நீ காலத்தில் தேவனா நீ 
    கவிதையின் கடவுளா நீ    🙏🙏🙏


    3 கருத்துகள்:

    1. அற்புதம்...கவிஞனா நீ..இல்லை இல்லை..காலத்தின் தேவன் நீ..கவிதையின் கடவுள் நீ..

      பதிலளிநீக்கு
    2. தமிழ் உள்ள வரை பாரதி வாழ்வார். அவ்வளவிற்கு காலங்களுக்கு ஏற்ற கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன அவன் கவியில். நன்று உங்கள் கவி. வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...