யேர்மனி தமிழ்க்
கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய
வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறுகதை நூலின் அறிமுகவிழா 08.12.2018 சனிக்கிழமை
அன்று யேர்மனி – டோட்முண்ட் நகரிலமைந்த Munster Str.122 என்ற
முகவரியிலுள்ள சிறப்பான அரங்கில் யேர்மனி
தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர்
திரு. பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களின் தலைமையில் மிகச்கோலாகலமான முறையில்
நடைபெற்றது. ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்
திரு. வைரமுத்து சிவராஜா, எழுத்தாளர்
திரு. தம்பிராஜா பவானந்தராஜா,மற்றும் எழுத்தாளர் திருமதி. கலாநிதி
ஜீவகுமாரன் (டென்மார்க்) ஆகியோர்
மங்கல விளக்கேற்றி வைத்ததனைத்
தொடர்ந்து மௌன வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து, தமிழ்வாழ்த்து, மற்றும்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களை, சிறப்பு
விருந்தனர் திருமதி. தர்மினி தில்லைநாதன் அவர்களின் மாணவர்களான சங்கீத கலாஜோதி ஆன்சகானா உலகரட்ணம், சங்கீத கலாஜோதி நிரஜா ஞானகணேசன், செல்வன் தனுஷன் சிவராஜா,
செல்வன் கீர்த்தனன் உதயகுமார், செல்வன் திலக்ஷன் பாஸ்கரன் (Keyboard) ஆகியோர் இசைத்தனர்.
செல்வன் கீர்த்தனன் உதயகுமார், செல்வன் திலக்ஷன் பாஸ்கரன் (Keyboard) ஆகியோர் இசைத்தனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை பிரதம விருந்தினர். கலாநிதி. திருமதி கீதாஞ்சலி பிக்கேர்ட் அவர்களின் பிள்ளைகள் வழங்கினர்.
அடுத்து, வரவேற்புரையினை
- யேர்மன் தமிழ்கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் யேர்மனி ஒபகௌசன்
அறிவாலயம் தமிழ்பாடசாலையின் பொறுப்பாசிரியருமான
கவிஞர் திரு. அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து யேர்மனி தமிழ்கல்விச்சேவை தலைவரும் டோட்முண்ட்
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் பொறுப்பாசிரியருமான தமிழ்மணி திரு. பொன்னுத்துரை
ஸ்ரீஜீவகன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனையடுத்து டென்மார்கிலிருந்து
வருகைதந்த பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான - எழுத்தாளர் வி. ஜீவகுமாரன் அவர்களின்
நயவுரை இடம்பெற்றது.
அதனையடுத்து நூல் வெளியீடு இடம்பெற்றது.
முதல் பிரதியினை பிரதம விருந்தினர் திருமதி. கீதாஞ்சலி பிக்கேர்ட் வழங்க எழுத்தாளர், ஊடகவியலாளர், ஐரோப்பாவில்
தமிழ் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்
தமிழ்வளர் செல்வன் இரா.இரமேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அவருடைய உரையைத் தொடர்ந்து திரு. இரா .இராமேஸ்வரன் அவர்கள் எழுத்தாளர் கௌசி அவர்களையும் அவர் குடும்பத்தினரையும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து நிகழ்வினை சிறப்பித்த, வெற்றிமணி
மற்றும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியர். கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து
கர்நாடக இசைஆசிரியை இசைக்கலைமணி திருமதி தர்மினி தில்லைநாதன் அவர்களின் உரையும்
மேலும் ஈழத்து மெல்லிசை மன்னன். திரு.எம்.பி.பரமேஷ்
அவர்களின் உரையும் இடம்பெற்றன.
தொடர்ந்த நிகழ்வாகக் சிரேஷ்ட விஞ்ஞானி திருமதி.கீதாஞ்சலி
பிக்கேர்ட் அவர்களின் பிரதம விருந்தினர் உரை
இடம்பெற்றதனைத் தொடர்ந்து தமிழ்கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர்கள், விழாவின்
பேராளர்களுக்கு பொன்னாடைபோர்த்திக் கௌரவிக்க விழாவின் நாயகி கௌசி அவர்கள் நினைவுப்பரிசில்களை வழங்கி
அவர்களைப் பெருமைப்படுத்தினார்.
விழாவின்
இடைவேளையினையடுத்து இசைக்கச்சேரி இடம்பெற்றது. இந்நிகழ்வினில் செல்வி.மெனூஷா சிவபாலன், சங்கீத கலாஜோதி.ரம்மியா துரைவீரசிங்கம், சங்கீத கலாஜோதி. நிரஜா ஞானகணேசன், செல்வி.சந்தியா நந்தகுமார், வயலின் சங்கீத
கலாஜோதி. தன்யாரேனுகா சந்திரா, மிருதங்கம் மிருதங்க கலாஜோதி. கயான் சிவபாலன் ஆகியோர் பங்கேற்றனர். கலைநிகழ்வுகளை வழங்கியவர்களுக்கான
கௌரவமும் நினைவுப்பரிசில்களும் பிரதம, சிறப்பு
விருந்தினர்களினாலும் நூலாசிரியரினாலும் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து விழாவின் நாயகியான கௌசி
அவர்களுக்கு ஏராளமான வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டதுடன்
பலரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் முக்கிய அம்சமாக
நூலாசிரியையின் ஏற்புரை இடம்பெற்றது.
விழாவின் நிறைவுப்பகுதியை நெருங்கிய தருணம் திருமதி சந்திரகௌரி
சிவபாலன் அவர்களுக்கு யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின்
தலைவர் திரு. பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திக் கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் கௌசி அவர்கள் யேர்மனி தமிழ் கல்விச் சேவைக்கு நன்றி கூறும் முகமாகத் தன்னுடைய நினைவுப் பரிசினை வழங்கினார்.
அதனை அடுத்து அறிவிப்பாளர் முல்லை மோகன் அவர்களுக்கும் எழுத்தாளர் கௌசி அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கினார். யேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
நிகழ்ச்சிகளை பிரபல அறிவிப்பாளர்
முல்லை மோகன் சிறப்பாகத் தொகுத்துத்து வழங்கினார்.
நிறைவு நிகழ்வாகவாக யேர்மனி
தமிழ்க் கல்விச்சேவையின் உப தலைவி திருமதி கலா மகேந்திரன் அவர்கள் நன்றியுரை
வழங்கினார்.
பேச்சாளர் மத்தியில் இளையோர்களின் உரைகள் சபையோர்களின் மனத்தைக் கவர்ந்தது.
யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் -
பேச்சாளர் மத்தியில் இளையோர்களின் உரைகள் சபையோர்களின் மனத்தைக் கவர்ந்தது.
யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் -