நூல்: ரசவாதி
ஆசிரியர் பாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் கனவுகளை பின்தொடர்ந்து செல்வதைப் பற்றிய ஒரு கற்பனை கதை.
16 வயது வரை ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக ஆவதற்கு பயிற்சி அளித்த ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்றிருந்த சான்டியாக்கோ இன்னும் இளைஞன் செம்மறியாடு மேய்ப்பவனாக பல இடங்களுக்குச் சென்று உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆசைப்பட்டு புறப்படுகின்றான். செல்லுகின்ற பாதையிலே தான் செம்மறியாடுகளை மேய விட்டுத் தான் வாசிக்கின்ற புத்தகத்தை தலையின் கீழே வைத்து அவன் தூங்குவான். தன்னுடைய புத்தகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான சில பகுதிகளை அவன் செம்மறி ஆடுகளுக்கு படித்துக் காட்டுவான். புல்வெளிகளில் ஆடுமேய்க்கும் ஒரு இடையனின் தனிமையையும் மகிழ்ச்சியையும் பற்றி அவன் அவற்றிடம் கூறுவான். அவன் கண்ட ஒரு கனவை நோக்கி பிரயாணம் செய்கின்றான். இடையிலே சலேம் நகரின் அரசனை, ஆங்கிலேயரை, ஒரு ரசவாதியை, ஒரு அரசனை, ஒரு முதியவரை, ஒரு படிகக்கல் விற்பனையாளர், இரண்டு பெண்களை, பாலைவனத்து மக்களைஎன்று சந்தித்து அவர்கள் பற்றியே விடயங்களை அறிகிறான் அவர்களைப் பற்றி எல்லாம் மிக அழகாக இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அவன் தேடிச்சென்ற புதையலைக் கண்டுபிடிப்பதாகக் கதையை ஆசிரியர் முடித்திருக்கின்றார்.
இந்த நூலில் பல விடயங்களை கேட்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஈயத்தை எப்படி தங்கமாக மாற்றுகிறார்கள் என்னும் ரசவாத வித்தையையும் பிரபஞ்சம் பற்றிய பல அற்புதமான தகவல்களையும் நெல் காலத்தில் மீது ஒருமித்த கவனம் செலுத்தினால் , அதை மேம்படுத்த முடியும். நிகழ்காலத்தை மேம்படுத்தினால் பின்னால் வருகின்ற விஷயங்களும் சிறப்பானவையாக இருக்கும்.
உண்மையில் ஒன்றை ஆழமாக விரும்பினால், அதை அடைவதற்கு ஒட்டுமொத்த பிரபஞ்சமும் எப்போதும் சாதகமான காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கும்
இந்த பூமியிலே இருக்கின்ற எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த பூமி ஜீவன் உள்ள ஒன்று அதற்கு ஒரு ஆன்மா இருக்கிறது நாம் அந்த ஆன்மாவின் ஒரு பகுதி எனவே அது நமக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அரிதாகவே உணர்கிறோம்.
மணல் துகள்களில் ஒரே ஒரு துவடை எடுத்து ஆய்வு செய்தால் போதும் படைப்பின் அதிசயங்கள். அனைத்தையும் அதிலே காணலாம்
நீங்கள் சொல்வதை வாழ்க்கை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்க கூடும்
இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி இவ்வுலக வரலாற்றில் அவர் ஒரு மைய பாத்திரம் வகிக்கின்றார். வழக்கமாக அவர் அதை அறிந்திருப்பதில்லை
தங்கள் கனவைப் பின் தொடர்ந்து செல்லுகிறவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது.
தினமும் ஒரே மாதிரியான விஷயங்களை தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று அர்த்தம் சாகச முயற்சிகளில் இறங்கும் போது தான் நீங்கள் உயிர்த்துடிப்போடு இருக்கிறீர்கள்
பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் அறிவார்ந்த மனிதர்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு மிக அதிகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு உலோகம் மட்டுமே.
ஒவ்வொரு புத்தகங்களும் மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புத்தகம் உன் இதயம் சொல்வதை நீ கேள், உன் நோக்கத்தை உன் கனவை நினைத்து நீ பயணம் செய்தால் ஒருமித்த சிந்தனை அதிலேயே வைத்து உன் பயணத்தை தொடர்ந்து செல் என்னும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதயம் என்பது மூளை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனக்கு இந்த நூல் மனத்துக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது